நாணயமும்! சுவாரஸ்ய தகவலும்!
சமீபத்தில் வெளியிடப்பட்ட “கலைஞர் 100” எனும் 100 ரூபாய் நாணயம், 10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் என திமுக கூறியுள்ளது. “100 ரூபாய் நாணயம் 10,000 ஆ??” என்பார்கள். ஏன் இவ்வளவு விலை? இதற்கான விளக்கம் வருமாறு:
இந்தியாவில் ரூபாய் / நாணயங்கள் அச்சிடப்படும் இடங்கள் 4 உள்ளன. இதில் 2 ரிசர்வ் வங்கிக்கும், மற்ற 2 SPMCIL-க்கு சொந்தமானவை. நாணயங்கள் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய 4 இடங்களில் அச்சிடப்படுகிறது.
அச்சடிக்கப்படும் நாணயங்கள் நாடு முழுவதும் 2,460 கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது. மக்கள் தேவை அதிகரிக்கும் போது, 19 (RBI) கிளை அலுவலகங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. நாணயங்களை கொண்டு செல்ல 2,794 நாணய பெட்டிகள் RBI பயன்படுத்துகிறது.
90s, 2K சந்ததியினர் அதிகபட்சம் 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழங்கியிருப்பார்கள். ஆனால், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியுமா? 1938ல் தயாரிக்கப்பட்டு 1946ல் நிறுத்தப்பட்டது, மீண்டும் 1954ல் அறிமுகப்படுத்தப்பட்டு 1978ல் திரும்பப்பெறப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, பிரிவு 1ன் படி, இந்திய அரசினால் 10 ஆயிரம் வரை மட்டுமே ரூபாய் நோட்டுகளை தயாரிக்க பரிந்துரைக்க முடியும். நாணயங்கள் சுத்தமான பருத்தி மூலம் தயாரிக்கப்படுகிறது.
நிமிடம் 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்கள் இருக்கும். ஆனால் 75, 100, 175 ஆகியவை “Commemorative Coins” எனப்படும் நினைவு நாணயங்கள். இவை 50% வெள்ளி, 40% தாமிரம், தலா 5% நிக்கல் & துத்தநாகம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதுவரை 350+ நினைவு நாணயங்களை RBI வெளியிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் அனுமதி, பரிந்துரை கட்டாயம். இந்த நாணயங்கள் நேரடியாக மத்திய அரசால் விற்பனை செய்யப்படுகின்றன.
100 ரூபாய் நாணயம் கூடுதல் விலைக்கு திமுக விற்பனை செய்கிறதா? இல்லை. காரணம், இதுபோன்ற நினைவு நாணயங்கள் அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக RBI தெரிவித்துள்ளது.
காரணம், குறைந்த அளவிலே தயாரிப்பதால் அதன் செலவு அதிகம். 50% வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் பயன்படுவதால் விலை அதிகம். சில நாணயங்களில் தங்கமும் பயன்படுத்தப்படுவதால் விலை உயர்கிறது.