தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்

Vijay


தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அண்மையில் அறிமுகம் செய்த அக்கட்சி தலைவர் விஜய், "ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை; தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறை வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்" என்று கூறினார்.

விஜயின் உரையில், "நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" எனத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கொடியில் இடம்பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதை பெருமையாகக் கருதுகிறேன் என்றும் விஜய் தெரிவித்தார். "நம் கட்சிக் கொடிக்கு பின்னணியாக ஒரு வரலாற்றுக்குறிப்பு உள்ளது; அதை பின்னர் தெரிவிக்கிறேன்" என்றார்.

இத்தனை நாள் நமக்காக உழைத்தோம், இனி மக்களுக்காக உழைப்போம் என தவெக தலைவர் விஜய் உறுதியாக கூறினார்.

Flag

அதிகாரப்பூர்வ கட்சி பாடல்